பாளையஞ்சாலை குமாரசாமி கோவில் புத்தாண்டு வழிபாடு

Update: 2021-01-01 09:51 GMT

புத்தாண்டை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள பிரசித்தி பெற்ற பாளையஞ்சாலை குமாரசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நெல்லை சந்திப்பில் உள்ளது பிரசித்தி பெற்ற பாளையஞ்சாலை குமாரசாமி கோவில், இக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தொழிலதிபர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்தாண்டு சிறப்பாக அமைய வேண்டும் என சாமி தரிசனம் செய்தனர். தக்கார் தங்கசுதா, செயல் அலுவலர் சண்முகம், கணேச பட்டர், கார்த்தி பட்டர், கண்ணன் பட்டார், சங்கர் பட்டர் ஆகியோர் கோவில் ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். மேலும் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் முகக்கவசம் அணிந்து வரிசையில் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Similar News