நாங்குநேரி எம்எல்ஏவை காணவில்லை என்ற வாசகத்தால் பரபரப்பு

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவை காணவில்லை கண்டுபிடித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என பஸ் நிலைய சுவரில் எழுதப்பட்ட வாசகத்தால் பரபரப்பு

Update: 2021-09-23 16:06 GMT

எம்எல்ஏவை காணவில்லை என சுவற்றில் எழுதப்பட்டிருந்த வாசகம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இதனைத் தொடர்ந்து நான்குநேரி தொகுதியை தமிழகத்தில் முன்னனி தொகுதியாக மாற்றுவேன் என்று பொதுமக்களிடம் கூறினார்.

ஆனால், அவர் ஒரு முறை கூட தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை என பொதுமக்களின் மனக் குமுறலாக உள்ளது. மேலும் நாங்குநேரியில் போக்குவரத்து பிரச்சினை மற்றும் குடிநீர் பிரச்சினை பெரும் பிரச்னையாக இருக்கிறது. இது குறித்து பலமுறை அவரிடம் புகார் அனுப்பியும் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். வெளியூர் சேர்ந்த வரை நாங்குநேரி எம்எல்ஏ வாக ஆக்கினால் இதுதான் நிலைமை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் நாங்குநேரி பஸ்ஸ்டாண்ட்டில் உள்ள சுவற்றில் இருந்த வாசகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன், சொன்ன சொல்லை தவறமாட்டான் ரூபி மனோகரன் அவரை காணவில்லை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். என பஸ்ஸ்டாண்ட்டில் மூன்று இடங்களில் எழுதிய இந்த வாசகத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாங்குநேரி போலீசில் மறுகால்குறிச்சியை சேர்ந்த நான்குநேரி காங்கிரஸ் நகர தலைவர் சுடலைக்கண்ணு அளித்த புகாரின் பேரில் இந்த வாசகத்தை எழுதிய கோகுலம் சந்தை சேர்ந்த தங்கையா மகன் ஐயப்பனை(47) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News