நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோத்ஸவ தேரோட்டம்
நாங்குநேரி ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் சித்திரை பிரம்மோத்ஸவ திருத்தேரோட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் சித்திரை பிரம்மோத்ஸவ திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கரகோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள 8 சுயம்வத்த ஸ்ஷேத்திரங்களில் நாங்குனோியும் ஒன்று. சுவாமி நம்மாழ்வாரால் 11 பாடல்கள் பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் பல்வேறு உற்ச்சவங்கள் ஆண்டு முமுவதும் கொண்டாடப்படுகின்றது. சிறப்பான சைத்ர ப்ரம்மோற்சவம் கடந்த 04 அன்று தொடங்கி 12 தினங்கள் ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி மதுரகவி ஸ்ரீ வானமாமலை இராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஆசிகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தினமும் பெருமாள் தாயாருக்கு காலை திருமஞ்சனம் மற்றும் வீதி புறப்பாடு மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. 10ம் திருநாளான இன்று காலை ஸ்ரீவரமங்கா சமேத சுவாமி தெய்வநாயகப் பெருமாள் தேருக்கு ஏழுந்தருளினா். தொடா்ந்து ஸ்ரீ வானமாமலை இராமானுஜ ஜீயா் சுவாமிகள் தேங்காய் விடல் போட்டு திருத்தோ் வடம் பிடிக்க பக்தா்கள் தேரை இழுத்தனா். ஆயிரக்கணக்கான மக்களின் கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தோ் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. தென் தமிழகத்தில் தோ் முற்றிலும் மனித முயற்ச்சியிலே இழுக்கப்படுகின்றது. தோ் விழாவினை வானுமாமலை மடத்தினா் ஏற்பாடு செய்திருந்தனா்.