நான்குநேரியில் விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்
நாங்குநேரி பேரூராட்சியில் விதிகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்தனர்.;
கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில். அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில்.
தமிழக அரசு கடந்த 10ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில். அது முழுமையா பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா என்று அந்த அந்த பகுதியை சேர்ந்த அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்..
நேற்று நான்குநேரி டவுன் பஞ்., செயலர் ராஜா நம்பிகிருஷ்ணன், சுகாதாரத்துறை இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலைமையில் போலீசார் மற்றும் டவுன் பஞ்., ஊழியர்கள் நான்குநேரி மெயின் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காத இரணடு டீ கடை மற்றும் முககவசம் அணியாமல் வந்த ஒருவருக்கும் தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.