திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கைசிக ஏகாதசி விழா
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கைசிக ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கைசிக ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி சின்ன ஜீயா் சுவாமிகள் பங்கேற்பு.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில். இங்கு நின்ற நம்பி, கிடந்த நம்பி. இருந்த நம்பி என மூன்று நிலைகளில் அழகிய நம்பிராயா் மூலவராக அருள்பாலிக்கின்றாா். திருக்கோவில் முன்பு அமைந்துள்ள கொடிமரத்தை தன் பக்தன் நம்பாடுவானுக்காக விலக்கி பெருமாள் காட்சி கொடுத்த இடம். இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி விழா கைசிக புராணம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். சிறப்பு வாய்ந்த கைசிக ஏகாதசி திருவிழா திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் நடைபெற்றது. இவ்விழாவில் திருப்பதி சின்ன ஜீயா் சுவாமிகள் பங்கேற்றாா்.
விழாவையொட்டி காலையில் அழகியநம்பிராயருக்கு திருமஞ்சனமும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இரவில் தோளுக்கினான் பல்லக்கில் அழகியநம்பி மூலஸ்தானத்திலிருந்து கைசிக மண்டபத்திற்கு வாத்தியங்கள் முழங்க எழந்தருளினார். இந்நிகழ்ச்சியில் திருப்பதி சின்ன ஜீயா் சுவாமிகள், திருக்குறுங்குடி பேரருளாளா இராமானுஜ ஜீயா் சுவாமிகள் மற்றும் அத்யாபகயினா் கலந்து கொண்டனா். ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் சாற்றி. மாலை அணிவித்து சடாாி மாியாதை செய்யப்பட்டது. கைசிக மண்டபத்திற்கு வாத்தியங்கள் முழங்க எழந்தருளினாா். அங்கு பேரருளா இராமானுஜ ஜீயா் சுவாமிகளுக்கு இராஜ மாியாதை வழங்கப்பட்டது. ஆன்மீக உபன்யாசங்கள், பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் கௌசிக புராண நாடகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந் நிகழ்சியை கண்டு மகிழ்ந்தனா்.