நெல்லை: சிலம்பம் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் அளிப்பு

நாங்குநேரியில் 15 வயதுக்குட்பட்ட பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளின் சிலம்பாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Update: 2021-07-13 17:18 GMT

நாங்குநேரியில் சிலம்பாட்டம் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளின் சிலம்பம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், நான்குநேரியில் 15 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிலம்பக்கலைப் பயிற்சி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வந்தது. ஏர்வாடி சஹாபா சிலம்பு கூடம் சார்பில் அளிக்கப்பட்ட சிலம்பாட்ட பயிற்சிகள் நிறைவு பெற்றதையொட்டி பயிற்சி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சிலம்பம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. 

நிகழ்ச்சிக்கு நான்குநேரி தாசில்தார் இசக்கி பாண்டி  தலைமை வகித்தார். நான்குநேரி டிஎஸ்பி ஸ்ரீலிஷா ஸ்டெபலா தெரஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் சிலம்பம், வாள்வீச்சு, தீப்பந்த விளையாட்டுகள், சுருள் வாள் வீச்சு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் செய்து காட்டினர்.

அதனைத் தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாசில்தார் இசக்கிபாண்டி பரிசுகள் வழங்கினார்.  மேலும் பயிற்சி பெற்றவர்கள் அனைவருக்கும் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

 

Tags:    

Similar News