தாமிரபரணி ஆற்றங்கரையில் மருத்துவ கழிவுகள்-மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
சுகாதார சீர்கேடு விளைவிக்கும் பொருட்டு தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் கழிவுப் பொருட்களை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான தாமிரபரணி ஆற்றங்கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டிய தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் (1,00,000) அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவின்படி, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியது குறித்து மாநகர் நல அலுவலர் மா.சரோஜா மற்றும் சுகாதார ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது சுகாதார சீர்கேடு விளைவிக்கும் பொருட்டு ஆற்றங்கரையோரம் மருத்துவ கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் (1,00,000) அபராதம் விதித்தனர். மேலும் சுகாதார மேற்பார்வையாளர் வேல்முருகன் மற்றும் தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் இளஞ்செழியன், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுபோன்ற, சுகாதார சீர்கேடு விளைவிக்கும் பொருட்டு தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் கழிவுப் பொருட்களை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளார்.