தாமிரபரணி ஆற்றில் குளிக்க வேண்டாம் : மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

Update: 2020-12-21 11:51 GMT

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையில் இருந்து 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றன.143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.நேற்று 3,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் இன்று 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

Similar News