ராதாபுரம் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக வென்றது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது.

Update: 2021-10-13 08:25 GMT

திமுக தலைவர் மு,க.ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக 12 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றிய சேர்மன் பதவியை கைப்பற்ற கைப்பற்றியது. அதிமுக மூன்று இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும், பிஜேபி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

4வது வார்டு ஜெஸ்ஸி, 5-ஆவது வார்டு அனிதா ஸ்டெல்லா, 6வது வார்டு இளையபெருமாள், 7-ஆவது வார்டு இசக்கி பாபு, 8வது வார்டு பரிமளம், 9வது வார்டு முருகன், 11வது வார்டு நடராஜன், 13வது வார்டு மவுலின், 14 வது வார்டு ஜேசுராஜ், 15வது வார்டு ஆல்வின் பிரேமா, 17வது வார்டு சௌமியா, 18-வார்டு அருணா ஆகியோர்திமுக வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்

1வது வார்டு மார்க்கெட் சித்ரா, 12வது வார்டு பாலன், 16வது வார்டு ராஜன் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 10வது வார்டில் பிஜேபி சார்பாக போட்டியிட்ட ஹரி முத்தரசு வெற்றிபெற்றார் .இரண்டாவது வார்டு உறுப்பினர் காந்திமதி, 3-ஆவது வார்டு உறுப்பினர் ஞான சர்மிளா ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News