பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவை முழுவதுமாக வெளியேற்றிய திமுக
திருநெல்வேலி மாவட்டத்தில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்று அதிமுகவை முற்றிலுமாக வெளியேற்றியது.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது இதில் திமுக தனித்துப் போட்டியிட்டு 8 இடங்களை கைப்பற்றியது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக போட்டியிட்ட எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1வது வார்டு மாரிமுத்து, இரண்டாவது வார்டு சமாதானம், 3வது வார்டு புஷ்பம், நாலாவது வார்டு வளர்மதி, 5-ஆவது வார்டு சுப்புலட்சுமி, ஆறாவது வார்டு பிரியா, ஏழாவது வார்டு செல்வி, எட்டாவது வார்டு பூங்கோதை, ஒன்பதாவது வார்டு சோழமுடி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.