தச்சநல்லூரில் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

தச்சநல்லூரில் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்;

Update: 2022-04-26 01:46 GMT

தச்சநல்லூரில் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய சரகத்தில் நைனார்குளம் மார்கெட்டில் லோடு ஆட்டோ ஓட்டி வரும் மானூர் சுப்பையாபுரம், அம்மன்கோவில் தெருவை சேர்ந்த வேல்சாமி தேவர் மகன் சசிகுமார் (வயது 42) என்பவர் 27.03.22 அன்று அதே ஊரை சேர்ந்த மாடசாமி தேவர் என்பவர் மகன் அழகுபாண்டியன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த தென்னங்கன்று, மற்றும் கார் செட்களை சேதப்படுத்தியதற்காக மேற்படி சசிகுமார் மற்றும் சிலர் மீது மானூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த முன்விரோதத்தின் காரணமாக, நேற்று 24.04.22 மேற்படி சசிகுமார் நைனார்குளம் காய்கறி மார்கெட்டில் லோடு இறக்கி கொண்டிந்தபோது, மேற்படி அழகுபாண்டியனின் மகன் பாலமுருகன் (வயது 25) என்பவர் சசிகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பித்து சென்றுவிட்டார். படுகாயமடைந்த சசிகுமார் அரசு மருத்துவ கல்லூhரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி இறந்துவிட்டர்.

இது தொடர்பாக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 1) பாலமுருகன் (வயது 29), த.பெ அழகுபாண்டியன், சுப்பையாபுரம் மானூர் 2) அழகுபாண்டியன் (வயது 57), த.பெ மாடசாமி, சுப்பையாபுரம் மானூர், 3) ராஜம்மாள் (வயது 52), க.பெ. அழகுபாண்டியன், சுப்பையாபுரம் மானூர், 4) அனிதா (வயது 36) க.பெ. சிதம்பரகுமார், காந்தி தெரு, திம்மராஜபுரம், 5) சங்கர் (எ) சங்கரநாராயணன் (வயது 24), த.பெ. ஆறுமுகம், தாழையூத்து, 6) சிதம்பரகுமார் (வயது 39), த.பெ. சம்பந்தன், காந்தி தெரு திம்மராஜபுரம் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்

Similar News