கல்லிடைக்குறிச்சியில் கிராம மகளிர் கைவினை பொருட்கள் விற்பனை மேளா

கல்லிடைக்குறிச்சியில் காசா நிறுவனம் சார்பில் கிராம மகளிர் கைவினை உற்பத்தி மற்றும் விற்பனை சந்தைப்படுத்துதல் மேளா நிகழ்ச்சி.

Update: 2022-03-10 12:36 GMT

கல்லிடைக்குறிச்சி அருகே கிராம மகளிர் கைவினை உற்பத்தி மற்றும் விற்பனை சந்தைப்படுத்துதல் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி அருகே கிராம மகளிர் கைவினை உற்பத்தி மற்றும் விற்பனை சந்தைப்படுத்துதல் மேளா நிகழ்ச்சி.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகிலுள்ள செம்பத்தி மேடு சமுதாய நல கூடத்தில் வைத்து சேரன்மகாதேவி காசா நிறுவனம் சார்பில் கிராம மகளிர் கைவினை உற்பத்தி மற்றும் விற்பனை சந்தைப்படுத்துதல் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி யூனியன் சேர்மன் பூங்கோதை குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கிராமோதயா தொடர்பு பணியாளர் திட்ட கண்காணிப்பாளர் சூர்யாசெல்வா, தொடர்பு பணியாளர்கள் இந்திராகாந்தி, சகுந்தலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதில் காசா நிறுவன சேரன்மகாதேவி பகுதி ஒருங்கிணைப்பாளர் பென்னி ஜோசப், நெறியாளர் விஸ்வநாதன், தன்னார்வ தொண்டர்கள் சுசிலா, திருப்பதி, சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மகளிருக்கு பயிற்சி அளித்தனர். இதில் அப்பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News