சேரன்மகாதேவியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி

சேரன்மகாதேவி வட்டார வள மையத்திற்குட்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான கண்காட்சி மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சி.

Update: 2022-03-10 12:16 GMT

சேரன்மகாதேவி வட்டார வள மையத்திற்குட்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான கண்காட்சி மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.

சேரன்மகாதேவியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமைய இல்லம்‌ தேடிக்கல்வி கண்காட்சி மற்றும்‌ இரண்டாம்‌ கட்டபயிற்சி.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டார வள மையத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி பெரியார்‌ அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி அரசு மகளிர்‌ உயர்நிலைப்பள்ளி மற்றும் சேரன்மகாதேவி வட்டார வளமையம்‌ சார்பில், சேரன்மகாதேவியில்‌ வைத்து இல்லம்‌ தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கான கண்காட்சி மற்றும்‌ இரண்டாம்‌ கட்டப்பயிற்சி நடைபெற்றது.

இதில் சேரன்மகாதேவி யூனியன் சேர்மன் பூங்கோதை குமார்‌ தலைமை வகித்து கண்காட்சியை துவக்கி வைத்தார்‌. சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர்‌ சங்கரகுமார்‌, பெரியார்‌ அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை எவாஞ்சலின்‌ பியூலா ராஜசெல்வி மற்றும்‌ சேரன்மகாதேவி அரசு மகளிர்‌ உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மரகதவல்லி ஆகியோர்‌ கண்காட்சியை பார்வையிட்டனர்‌. இல்லம்‌ தேடிக்கல்வி கண்காட்சிக்கான சிறந்த படைப்புகளை ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ சங்கர்துரை, அசோக்குமாரி, சந்திர சுப்பிரமணியன்‌ மற்றும்‌ சிறப்பாசிரியர்கள்‌ தேர்ந்தெடுத்தனர்‌. வட்டார வளமைய மேற்பார்வையாளர்‌ (பொ) பாஸ்கரன்‌ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்‌.

Tags:    

Similar News