வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி
அம்பாசமுத்திரத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் ஒத்திகை பயிற்சி.;
வாகைகுளத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்பந்தமான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் ஆலோசனைப்படி அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் இணைந்து வாகைக்குளம் பஞ்சாயத்து தலைவி சுப்புலட்சுமி தலைமையில் வாகை குளத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.