வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தீயணைப்புத்துறை மீட்பு ஒத்திகை பயிற்சி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புதுறை சார்பில் தாமிரபரணி ஆற்றில் மீட்பு ஒத்திகைபயிற்சி நடைபெற்றது

Update: 2021-09-28 15:45 GMT

நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணையில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி 

நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணையில் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணையில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீரில் விழுந்தவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் தண்ணீரில் சிக்கியவர்களை ரப்பர் படகில் சென்று காப்பாற்றுவது, விலங்குகளை மீட்டு கொண்டு வருதல், வெள்ளத்தில் சிக்கியவர்கள் கட்டைகள் மூலமாக எவ்வாறு தண்ணீரில் இருந்து மீண்டு வருவது போன்றவற்றை தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை மூலம் விளக்கமளித்தனர். அவ்வாறு காப்பாற்றிவர்களுக்கு எந்தவித முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெற்றிச்செல்வி, தீயணைப்பு மாவட்ட அலுவலர் சத்ய குமார், உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த், அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்ரமணியன் உள்பட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News