வீரவநல்லூரில் அரசு பள்ளியில் புதிய தொழில்நுட்ப ஆய்வகம்: எம்எல்ஏ திறப்பு

வீரவநல்லூரில் பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய தொழில்நுட்ப ஆய்வகத்தை எம்எல்ஏ இசக்கி சுப்பையா திறந்து வைத்தார்.

Update: 2021-09-30 13:17 GMT

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமை தாங்கி அடல் டிங்கரிங் தொழில்நுட்ப ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவினை தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் மதியழகி வரவேற்புரையாற்றினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர்கள் சேரன்மகாதேவி கருத்தப்பாண்டி, அம்பை விஜயபாலாஜி, நகரசெயலார்கள் வீரவநல்லூர் சுப்பிரமணியன், சேரன்மகாதேவி பழனிகுமார், அம்பை அறிவழகன், வி.கே.புரம் கண்ணன், சேரன்மகாதேவி மாரிச்செல்வம், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ரவிச்சந்திரன், திருமலையப்பன், வக்கீல் சிவசுப்பிரமணியன், மகாராஜன் மற்றும் மாணவ-மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சங்கர் நன்றி உரையாற்றினார்.

Tags:    

Similar News