நெல்லை: முக்கூடல் பேரூராட்சியில் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ஆய்வு

நெல்லையை அடுத்த முக்கூடல் பேரூராட்சியில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி எச் பி மனோஜ் பாண்டியன் ஆய்வு செய்தார்.;

Update: 2021-11-09 17:00 GMT

முக்கூடல் பேரூராட்சியில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் ஆய்வு செய்தார்.

நெல்லையை அடுத்த முக்கூடல் பேரூராட்சியில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்தும், பொதுமக்களின் குறைகள் குறித்தும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் முக்கூடல் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அலுவலகத்தில் வைத்து நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது இந்திரா நகர், லட்சுமியாபுரம், சிங்கம்பாறை ஆகிய பகுதிகளில் மின்விளக்கு மற்றும் குடிநீர் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். சட்டமன்ற உறுப்பினருடன் அதிமுக நகரச் செயலாளர் வில்சன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சண்முகநாதன், நகர பொருளாளர் முருகன், அண்ணா நகர் முருகப்பெருமாள் பால்ராஜ், சிங்கம்பாறை மகேஷ், சடையபுரம் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News