நெல்லை: பறவைகளை பாதுகாத்து வரும் கிராம மக்களுக்கு ஆட்சியர் பாராட்டு

திருப்புடைமருதூரில் பறவைகளை பாதுகாத்து வரும் கிராம மக்களுக்கு ஆட்சியர் விஷ்ணு பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-05-22 14:51 GMT

திருப்புடை மருதூரில் பறவைகளை பாதுகாத்துவரும் கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு பாராட்டு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடை மருதூரில் பறவைகளை பாதுகாத்துவரும் கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு இனிப்புகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடை மருதூரில் சர்வதேச உயிரிபல்வகைமை தினம் 2022 யை முன்னிட்று பறவைகளை பாதுகாத்து வரும் கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு நேரில் சென்று (21.05.2022) இனிப்புகளை வழங்கி பாராட்டி தெரிவித்ததார்.

வளங்குன்றா வளர்ச்சி என்பது உயிரி பல்வகைமையை அடிப்படையாக கொண்டது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்பது உயிரி பல்வகைமைக்கு பெரும் சவாலாக உள்ளது. கால நிலை மாற்றம், சுகாதாரப் பிரச்சினைகள், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, நிலையான வாழ்வாதரங்கள் போன்றவற்றை இயற்கை அடிப்படையிலான தீர்வுகளிலிருந்து மீட்டெடுப்பதன் மூலமே உயிரி பல்வகைமையை நிலைத்திருக்கச் செய்யும். மக்களுக்கு உயிரி பல்வகைமையின் முக்கியத்துவத்தையும் அவைகள் சந்தித்து வரும் பிரச்சினைகளையும், அதைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவிப்பினை உருவாக்குவதை கருத்தில் கொண்டு 2002 முதல் ஒவ்வொரு வருடமும் மே 22ம் தேதி சர்வதேச உயிரிபல்வகைமை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இவ்வருடத்தின் கருப்பொருள் அனைத்து உயிர்களுக்குமான பகிரப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குதல் என்பதாகும். நம் மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி பாய்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டம் காடுகள் குளங்கள், கோவில்கள், நந்தவனங்கள், நூற்றாண்டுகளைக் கடந்த மருதமரச் சாலைகள் என பல சூழலியல் அமைப்புகளைக் கொண்டு உயிரிபல்வகைமைக்கு ஆதாரமாக உள்ளது. குறிப்பாக கூந்தன்குளம், திருப்புடைமருதூர் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் குடியிருப்புகளுக்கூடே தங்கி இனப்பெருக்கம் செய்வது பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மக்களும் பறவைகளும் ஒத்திசைந்து வாழ்வதற்கு இக்கிராமங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. திருப்புடைமருதூர் கிராம மக்களின் இந்த பெருந்தன்மையை பாராட்டி ஊக்குவிக்கம் விதமாக சர்வதேச உயிரிபல்வகைமை தினத்தை இக்கிராமத்தில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

உயிரிபல்வகைமைச் சட்டம் 2002ன் படி திருப்புடைமருதூர் கிராம ஊராட்சியில் உயிரிப்பல்வகைமை மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டு குழுவின் 7 உறுப்பினர்களும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஊராட்சி மன்றத் தலைவி தலைமயிலான இக்குழு கிராமத்தில் உள்ள உயிரியல் வளங்களை மக்கள் உயிரிபல்வகைமை பதிவேட்டில் பதிவு செய்ய உள்ளார்கள்.

மேலும் அவ்வளங்களை நிர்வாகிக்க மேலாண்மைத் திட்டத்தையும் தயாரிக்க உள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன, அதில் குறிப்பாக அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் மூலமாக தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சமூக சூழலியல் அமைப்புகளை மறு சீரமைத்தல் தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள மற்ற கிராமங்களிலும் உயிரிப்பல் வகைமை மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு மக்கள் உயிரிபல்வகைமை பதிவேடு தயாரிக்கப்பட உள்ளது என்றும் தாமிரபரணி நதியுடன் தொடர்புடைய கலைகளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட கலைமன்றம் மூலமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன என்றும் நீர் ஆதாரங்களை பாதுகாப்பது மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை பேணி காக்க வேண்டியது பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு வனத்துறை, திருநெல்வேலி கோட்டம் மூலம் தயாரிக்கப்பட்ட திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகம் தொடர்பான குறும்படத்தையும் வெளியிட்டு சேரன்மகாதேவியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் எழுதி இசையமைத்துள்ள "என் தாயே என் தாமிரபரணி என்ற பாடலின் ஒலி வடிவத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்.வெளியிட்டார். மணிமுத்தாறு சிறப்புக் காவல்படை 12ம் அணியின் தளவாய் கார்த்திகேயன் தலைமையில் சுமார் 200 பயிற்சிக் காவலர்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்த குப்பைகள் மற்றும் களைச்செடிகளை அகற்றினார்கள். தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற பிரச்சாரப் பேரணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் நெல்லை நீர்வளம் தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்கள். மணிமுத்தாறில் இயங்கிவரும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், திருநெல்வேலி மாவட்ட வனக் கோட்டம் மற்றும் மணிமுத்தாறு சிறப்புக் காவல்படை 12ம் அணி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் பழனி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிந்து, உதவி வனப்பாதுகாவலர்கள் ஷா.நவாஸ்கான், பானுப்பிரியா, பேரிடர் மீட்புத் துறை வட்டாட்சியர் செல்வம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை சசிகுமார், வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் ராஜேஸ்வரன், பாலசுப்பிரமணியன் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியன், நல்லபெருமாள், ராம்குமார், அமரவேல் பாபு, நிவேக் ஆகியோர் உட்பட பொதுமக்கள்,தன்னார்வளர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News