பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்
அம்பாசமுத்திரம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்.
அம்பாசமுத்திரம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த காத்திருப்புப் போராட்டம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். மேற்படி தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி தினசரி சம்பளம் ரூபாய் 411 வழங்குவதற்கு பதிலாக ரூ 355 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் தொழிலாளர்களின் குடியிருப்புகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யக் கூடிய ஈபிஎப் -ஜிபிஎப் வங்கி கடன் கூட்டுறவு சொசைட்டி அனைத்திற்கும் பணம் பிடிக்கப்பட்டு எந்த பணமும் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு செலுத்தாமல் ஏமாற்றபடுகிறது.
வேலை செய்வதற்கான பொருட்கள் எதுவும் முறையாக வழங்குவதில்லை. வேலை செய்யும் போது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை கையுறை, காலுறை, மலைக்கோட், முககவசம் எதுவும் வழங்காமல் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். எனவே தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவுப்படி தினசரி சம்பளம் ரூபாய் 411 வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படக்கூடிய ஈபிஎப், ஜிபிஎப் வங்கி கடன் சொசைட்டி கடன் ஆகியவற்றிற்கு பிடித்தம் செய்யக் கூடிய பணம் முழுமையாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் செலுத்தப்பட வேண்டும். தொழிலாளர்களின் குடியிருப்புகள் அதை சரிசெய்து தொழிலாளர்கள் பாதுகாப்பாக குடியிருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் வேலை செய்வதற்கான உபகரணங்கள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நகராட்சி தூய்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர்.
போராட்டத்தில் CITU மாவட்டச் செயலாளர் மோகன், துணை செயலாளர் சுரேஷ், சங்க நிர்வாகிகள் சுடலையாண்டி, இசக்கிரான், ஜெகதீஸ், கணேசன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஊழியர்கள் கலைந்து சென்றனர்.