மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை

மணிமுத்தாறு அருவியில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை.

Update: 2022-05-20 06:59 GMT

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் பார்வையிட மட்டும் அனுமதி அளித்து குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை நேற்று அறிவித்துள்ளது. மேலும் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக இன்றும் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது.

Tags:    

Similar News