குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை கண்டறியும் விழிப்புணர்வு முகாம்

சேரன்மகாதேவியில் ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணத்திட்டத்தில் பெற்றோர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு

Update: 2021-09-20 18:00 GMT

சேரன்மகாதேவி வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பாக o வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டினை கண்டறியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

2018 முதல் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் (போஷன் அபியான்) ஒவ்வோரு வருடமும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு "ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்" என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 சேரன்மகாதேவி வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பாக வட்டாரத்தில் உள்ள 0 வயது முதல் 5 வயது குழந்தைகள் அனைவருக்கும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எடை, உயரம் கண்காணிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டினை கண்டறிந்து பெற்றோர்களுக்கு தகுந்த ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News