செங்குளம் வண்ணாரமாட சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா: பக்தர்கள் தரிசனம்

செங்குளம் ஸ்ரீ வண்ணாரமாட சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-12-08 15:35 GMT

செங்குளம் ஸ்ரீ வண்ணாரமாட சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. 

செங்குளம் ஸ்ரீ வண்ணாரமாட சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. ஊர்மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அடுத்துள்ள கபாலிபாறை செங்குளம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ வண்ணாரமாட சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலையில் மங்கள இசையுடன் நான்காம் கால யாக பூஜை, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து மூலவர் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து வண்ணாரமாட சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் முத்துராஜ், செல்லத்துரை, பேச்சித்துரை, சண்முகவேல், ஜான்பாண்டி, கோவிந்தன் உட்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News