திருவள்ளுவர் கல்லூரியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி துவக்க விழா

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான மூன்று மாத இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நிகழ்ச்சி.

Update: 2021-12-18 14:14 GMT

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் போட்டித் தேர்வுகான மூன்று மாதம் இலவச பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் போட்டித் தேர்வுகான மூன்று மாதம் இலவச பயிற்சி துவக்க விழா.

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத்துறை மற்றும் திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் இணைந்து "வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் நிகழ்ச்சி" எனும் பொருண்மையில் ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் முக்கியவிருந்தினராக ஆ.ஜோதிமணி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) திருநெல்வேலி மண்டலம், சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குநர் மரிய அந்தோணி மற்றும் கௌரவவிருந்தினராக சை.சையதுமுகம்மது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் திருநெல்வேலி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ- மாணவியருக்கான வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுகளில் பங்களிப்பு மற்றும் வெற்றி பெருவதற்கான நுணுக்கங்கள் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.

கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். கவிதா வரவேற்புரை நல்கினார். வேதியியல் துறைத் தலைவர் முனைவர்.இராஜசேகரன் தலைமையுரையாற்றினார். பேராசிரியர்.கு.ஜெபமணி சாமுவேல், ஆங்கிலத்துறைத் தலைவர், முனைவர் சா.ஷேக்முஜிபூர் ரகுமான், வணிகவியல் துறைத்தலைவர், பேராசிரியர். வைத்தீஸ்வரன் முனைவர்.சத்தியா, உ.இசக்கியம்மாள் கணிதத்துறைத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சண்முகபிரியா மூன்றாம் ஆண்டு மாணவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு முனைவர். ச.பாலச்சந்திரன் நூலகர், உதவிநூலகர் சண்முகானந்த பாரதி, சிவதாணு, சந்தானசங்கர், காசிராஜன், இசக்கியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர். கல்லூரியின் மாணவ-மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News