வேகமாக நிரம்பும் பாபநாசம் அணை: 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி
காரையார் குடிநீர் மற்றும் பிசான சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வருகிறது விவசாயிகள் மகிழ்ச்சி.
தாமிரபரணி அணை எனப்படும் பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காரையாரில் அமைந்துள்ளது தாமிரபரணி அணை. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை தற்போது பொது மக்களால் பாபநாசம் அணை என்று அழைக்கப்பட்டு வருகிறது. பாபநாசம் அணை மூலமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 136.35 அடியாக உள்ளது அணைக்கு வினாடிக்கு 686 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1421 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாபநாசம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் பிசான பருவ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.