அம்பாசமுத்திரத்தில் நுகர்வோர் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருபத்தி 25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.;
அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக குடோனில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக குடோனில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 25 சதவீத போனஸை வலியுறுத்தி முழக்கங்கள் இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதனை கூறி 10 சதவீத போனஸ் மட்டுமே வழங்கினார்கள்,
தற்போது புதிய ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்திருந்த 20 சதவீத போனஸிலிருந்து பணி சுமை காரணமாக 25 சதவீத போனஸ் வழங்கிட தமிழ்நாடு வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் அம்பாசமுத்திரம் சங்க தலைவர் ராஜகோபால் தலைமையில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.