முக்கூடல் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் ஆய்வு

நெல்லையை அடுத்துள்ள முக்கூடல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.;

Update: 2021-12-11 15:30 GMT

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகிலுள்ள சிவகாமிபுரம், ராஜீவ் காலனி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டு, இனி வரும் காலங்களில் வெள்ள நீர் சேதம் வராதபடி பாதுகாத்து தரப்படும் என்று அங்குள்ள பொதுமக்களிடம் ஆட்சியர் விஷ்ணு கூறினார்.

மேலும் முக்கூடல் கோரங்குளத்தை பார்வைட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கோரங்குளம் நிர்வாகிகள் இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், தவறாக போடப்பட்ட பட்டாக்களையும் நீக்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பொதுமக்களிடம் கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News