பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்

பத்தமடை அருகே சாலை விரிவாக்கப் பணியில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் 2 பேர் பலி. 3 பேர் காயம்.;

Update: 2022-05-05 06:19 GMT
பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்

நெல்லை அருகே பத்தமடையில் சாலை விரிவாக்க பணியின் போது மரம் விழுந்ததில் சேதமடைந்த ஆட்டோ.

  • whatsapp icon

நெல்லை அருகே பத்தமடையில் சாலை விரிவாக்க பணியில் மரம் ஆட்டோ மீது விழுந்து 2 பேர் பலி. 3 பேர் காயம்.

திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் நெடுஞ்சாலையில் பத்தமடை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு இன்று மரம் மரத்தை அப்புறப்படுத்துவதற்காக பணிகள் நடைபெற்று வந்தன. விரிவாக்க பணியின் போது ஆலமரம் தோண்டப்பட்ட போது மரம் ஆட்டோவின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில ஆட்டோ டிரைவர் காதர் மற்றும் ஆட்டோவில் வந்த பெண் ரஹமத் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். யாரு இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடலை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்தமடை பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News