நெல்லையில் கொரோனா பாதித்து உயிரிழந்த உடல்கள் - அடக்கம் செய்த தன்னார்வலர்கள்.

நெல்லை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை 111வது நல்லடக்கம் மற்றும் தகனம் செய்துள்ளனர்;

Update: 2021-05-21 10:58 GMT

பாப்புலர் ஃப்ரண்ட் நெல்லை மாவட்ட தன்னார்வலர்கள்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நான்கு நபர்களின் உடல்களை பாப்புலர் ஃப்ரண்ட்அமைப்பு தன்னார்வலர்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்ட தலைவர் முகம்மது அலியை தொடர்பு கொண்டு உடலை பெற்று நல்லடக்கம் செய்ய உதவி கோரினர்.

இதையடுத்து பாப்புலர்‌ ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்ட தன்னார்வ குழுவினர் உடலை பெற்று ஆம்புலன்ஸ் மூலம் உடலை அம்பை, வி.கே. புரம்,கள்ளி குளம்,வி.எம்.சத்திரம் நவீன எரிவாயு தகன மேடை மற்றும் அடக்கஸ்தலத்திற்கு கொண்டு சென்று உலக சுகாதார நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றி‌ இறந்தவரின் மதப்பிரகராம் உடல்களை நல்லடக்கம் மற்றும் தகனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் சுற்று வட்டாரங்களில் இதுவரை 111வது நல்லடக்கம் மற்றும் தகனம்செய்துள்ளனர்

Tags:    

Similar News