வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.;
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 12 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு வருகிறது.
திமுக கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக, பிஜேபி, சுயேச்சை ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு வெற்றிப் பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழா ஊராட்சி ஒன்றிய அவலகத்தில் உள்ள மன்றக் கூடத்தில் நடைபெற்றது.
3வது வார்டு பொன்குமார், நாலாவது வார்டு டெய்சி ஒபிலியா, 5வது வார்டு தாய் செல்வி, ஆறாவது வார்டு அலெக்ஸ் பால் கோசின், 8வது வார்டு திவாகரன், ஒன்பதாவது வார்டு சேவியர் செல்வராஜா, 10வது வார்டு ஜெயா, 11வது வார்டு மகாலட்சுமி ,12வது வார்டு மல்லிகா, 13 வது வார்டு பாண்டித்துரை, 16வது வார்டு அனிதா, 17வது வார்டு அஜெந்தா ஆகிய திமுக ஒன்றிய கவுன்சிலர்கள்,
இந்திய தேசிய காங்கிரஸ் கவுன்சிலர் 2 வது வார்டில் பிளிப்ஸ், 7வது வார்டில் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் 14 வது வார்டு சாரதா, பிஜேபி ஒன்றிய கவுன்சிலர் 15 வது வார்டு ஜெயலட்சுமி, சுயேச்சை கவுன்சிலர் 1-வது வார்டு ஜாவித் ஆகியோர் ஒன்றிய கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பதவிப்பரமாணம் செய்து வைத்தார்.