திமுக கூட்டணி தோல்வியடையும்: இந்து தேசிய கட்சி
இந்து மத விரோத போக்கை கடைபிடிப்பதால் திமுக கூட்டணி தோல்வியடையும், பாஜக நடிகர் நடிகைகளின் கூடாரமாக உள்ளது என இந்து தேசிய கட்சி நிறுவனர் எஸ்.எஸ்.எஸ்.மணி குற்றச்சாட்டு.
இந்து தேசிய கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது, இந்து தேசிய கட்சி 160 தொகுதியில் தனித்து போட்டியும், 74 தொகுதிகளில் அமமுகவை ஆதரித்தும் தேர்தலை சந்திக்க உள்ள சூழலில் முதற்கட்டமாக 25 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 4 வேட்பாளர்களும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் வைத்து நடைபெற உள்ளது.
இது குறித்து இந்து தேசிய கட்சியின் நிறுவன தலைவர் எஸ்.எஸ்.எஸ்.மணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் பொழுது, இந்து மத விரோத போக்கை கடைபிடிப்பதால் திமுக கூட்டணி தோல்வியடையும், மக்கள் நீதி மையம் கூட்டணி கடந்த கால மக்கள் நல கூட்டணி போல செயல் வடிவம் கொடுக்கும் தோல்வி நிலையை அடையும், நடிகர் நடிகைகளின் கூடாரமாக பாஜக திகழ்கிறது. இந்திய தேசியத்தை ஆளும் பாஜக, திராவிட கட்சிகள் இடத்திலே 20 சட்ட மன்ற வேட்பாளர்களுக்கு யாசகம் கேட்டு காத்து கொண்டு இருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.