வேளாளர் அரசாணை விரைவில் சட்ட வடிவமாக்க வேண்டும்: ராஜ்குமார்
மத்திய அரசு தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை விரைவில் சட்ட வடிவமாக்கி தரவேண்டும், அதனை தொடர்ந்து எங்களை ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்திட உறுதி கூற வேண்டும். -தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் .;
நெல்லையில் நடைபெற்ற தமிழர் விடுதலை களம் தலைவர் ராஜ்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எங்கள் சமூகத்தின் நீண்ட ஆண்டு கால கோரிக்கையான பண்ணாடி, காலாடி, கடையர், மூம்பர், பள்ளர், குடும்பர், வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திட கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நீண்டகாலமாக போராடி வந்தோம் தற்போதைய எங்களின் போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரிக்கையினை மத்திய அரசு பரிந்துரை செய்த தமிழக அரசுக்கு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மக்கள் அவையில் மசோதாவை தாக்கல் செய்த மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சார்பாகவும், தமிழர் விடுதலைக் களம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் மேலும் மத்திய அரசு தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை விரைவில் சட்ட வடிவமாக்கி தரவேண்டும் எனவும், அதனை தொடர்ந்து எங்களை ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்திட உறுதி கூற வேண்டும்.
மேலும் நெல்லை மாவட்டம் மணப்படை வீடு, திருமலை கொழுந்து புரம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த மக்கள் விவசாய வேலைக்கு வாகனத்தில் செல்லும்போது சாலை விபத்தில் மணப்படை வீடு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை ஏற்புடையதல்ல, தமிழக அரசு இதுகுறித்து விசாரணை செய்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் 3 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பொதுக்குழுவில் முடிவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் முத்துகுமார், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெகன்பாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் மணிபாண்டியன், மாநகர் மாவட்ட தலைவர் சுபாஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மங்கள்ராஜ்பாண்டியன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் சிவா,கருங்குளம் ஒன்றிய தலைவர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.