சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்க வண்ண கோலங்கள்
டவுண் சாலைகளை வண்ணமயமாக்கிய மாநகராட்சி பணியாளர்கள்;
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவு படி, மாநகர நல அலுவலர் டாக்டர்.சரோஜா ஆலேசனை படி திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலம் டவுண் அலகு எண் 1,2 உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தேவையில்லாமல் சாலையில் குப்பை கொட்டுவதை தடுப்பதற்காக குப்பை கொட்டும் சாலைகளில் திருநெல்வேலி மண்டலம் சுகாதார அலுவலர் முருகேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் மாநகராட்சி பணியாளர்கள் கோலம் போடும் பணியை மேற்கொண்டனர்
இதனை துப்பரவு மேற்பார்வையாளர்கள் சிவகுமார், கிளி இசக்கி சுந்தரம் மேற்பார்வை செய்தனர். இந்த புது முயற்சிக்கு நெல்லை பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் சுகாதார பணிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.