உயரும் புற்று நோய்கள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்
70% பேர் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனையை அணுகுவதால் அவர்களை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு குறைகிறது.
நெல்லை மாவட்டத்தில் 19,872 புற்றுநோயாளிகள் உள்ளதாக நெல்லை கேன்சர் சென்டர் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
நெல்லை பத்திரிக்கையாளர் கூட்டரங்கில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மருத்துவர் சந்தானம், உதவும் உள்ளங்கள் அமைப்பின் நிர்வாகி சங்கர் மகாதேவன், மருத்துவர் விதுபாலா ஆகியோர் கூட்டாக பத்திரிக்கையாளர்களும் கூறும்போது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக உலக சுகாதார மையம் நம்மால் முடியும் என்னால் முடியும் என்ற மையக்கருத்தை அறிவித்து புற்றுநோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.
இந்திய அளவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 70% நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனையை அணுகுவதால் அவர்களை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு குறைகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கும் புற்றுநோய் வருகிறது. அதில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தையும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கிறது. ஆண்களுக்கு வயிறு மற்றும் நுரையீரல் வாய் புற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலும் புற்றுநோய் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டின் படி கடந்த 2012 முதல் 2020 வரையிலான ஒன்பது ஆண்டுகளில் 19 872, புதிய புற்றுநோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பக்௧த்து மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பதிவான நோயாளிகளில் சேர்த்து கணக்கிட்டால் 50 ஆயிரத்து 173 நோயாளிகள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் பல்வேறு மருத்துவமனைகளில் தங்களது பெயரை பதிவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்களுக்கான புற்றுநோய்க்கு புகையிலையை காரணம் புகையிலை கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இந்திய சுகாதார நிறுவனம் 2005ஆம் ஆண்டு கையெழுத்து இட்டாலும் மாவட்ட அளவில் உள்ள பீடி தொழிலுக்கு மாற்று தொழிலை வழங்குவது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெல்லை கேர் சென்டர் உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பு சாரா நிறுவனத்தில் வாயிலாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1810 மருத்துவ பரிசோதனையின் மூலம் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 67 பேருக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி 36 ஆயிரத்து 703 வேர்கிங் சோதனையை இலவசமாக செய்து உள்ளது பலர் ஆரம்ப நிலையில் இருந்ததை கணக்கிட்டு அவர்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கப் பட்டுள்ளது. எனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் உலக புற்றுநோய் தினத்தினை முன்னிட்டு நெல்லை கேன்சர் கேன்சர் உடன் இணைந்து புற்றுநோயை தடுக்க செயல்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.