தமிழக அரசு மருத்துவமனை செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் பல இடங்களில் செய்கின்றனர். அதன்படி திருநெல்வேலியில் இன்று காலை 7:50 மணிக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பாக்க கருப்பு பட்டை அணிந்து குரல் முழக்க போராட்டம் நடத்தினர்.