இந்தியாவிலேயே ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயில் என்ற சிறப்பு உடையது ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம். திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் (ஜங்ஷன்) இருந்து சரியாக 2 கிலோமீட்டர் தொலைவில் மணிமூர்த்திஸ்வரத்தில் அமைந்துள்ளது இக்கோவில். வரும் ஞாயிற்றுக்கிழமை (24/01/2021) காலை 9 மணி முதல் 10.30 க்குள் இந்த ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் வருஷாபிஷேக விழா நடைபெற உள்ளன.