மாஞ்சோலை எஸ்டேட்டில் அதிக மழைப்பொழிவு

Update: 2021-01-14 06:48 GMT

இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவு திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட்டில் பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலிலும் மழை தொடர்ந்து பெய்தது. அதிகபட்சமாக, பாபநாசம் அணைப் பகுதியில், 18.5 செ.மீ., மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில், 16.5 செ.மீ., மழை பெய்தது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுதும், தாமிரபரணியில் திறக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் மழைநீரும் சேர்ந்து, வினாடிக்கு, 50 ஆயிரம் கன அடி நீர் சென்றது.

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்தை தரும், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்துள்ளது. மாஞ்சோலை, ஊத்து பகுதியில், 52 செ.மீ., மாஞ்சோலையில், 35 செ.மீ., நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில், 37 செ.மீ., மழை பெய்தது.கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவிலேயே இங்கு அதிக மழைப்பொழிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News