தேசிய பேரிடர் மீட்பு படை நெல்லைக்கு விரைவு

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. பொதுமக்கள் ஆற்றுப்பக்கம் போக வேண்டாம் என எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-01-12 13:49 GMT

தொடர் கனமழை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்பு படை நெல்லைக்கு விரைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பாபநாசம் மணிமுத்தாறு அணைகள் நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் சுமார் 40000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது . தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சார்ந்த நந்தகுமார் தலைமையில் 50 பேர் அடங்கிய 2 இரண்டு குழுக்கள் நெல்லை விரைந்துள்ளது.

Similar News