தொடர் கனமழை – தாமிரபரணியில் வெள்ளம்

ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லவேண்டாம் : மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை;

Update: 2021-01-12 12:28 GMT

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், காட்டாற்று தண்ணீர் என தாமிரபரணி ஆற்றில் சுமார் 6 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் இன்று 4-வது நாளாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாபநாசம் , அப்பாசமுத்திரம் , நெல்லை உள்பட ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

அதன் படி வண்ணார்பேட்டை சாலை தெரு, எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்புத் தொண்டர் தெரு, பைபாஸ் ஆற்றுப்பாலம் கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேதாஜி ரோடு குருந்துடையார்புரம் ஆகிய பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ, தலைமையில் எல் சி எஃப் ஐயப்பன் ,கார்த்தி தூய்மைப் பணியாளர்கள் அருண் ,இசக்கிமுத்து ஆகியோருடன்  "ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லவேண்டாம்" எனவும் ஒலிபெருக்கி மூலம் ஆட்டோக்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Similar News