நெல்லையில் புதிய தொழில்நுட்பத்தில் அலங்கார் சினிமாஸ் திறப்பு
நெல்லை மேலப்பாளையத்தில் புதிய தொழில்நுட்பத்தில் அலங்கார் சினிமாஸ் திறப்பு விழா நடைபெற்றது.;
நெல்லை மேலப்பாளையத்தில் புதிய தொழில்நுட்பத்தில் அலங்கார் சினிமாஸ் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு திரையரங்கு உரிமையாளர்கள் வி.டி.எஸ்.ஏ.அப்துல்ஹமீது, வி.டி.எஸ்.ஏ.ஹமீது ஹுசைன் ஆகியோர் திரையரங்கினை திறந்து வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாநகர காவல்துறை இணை ஆணையர் சரவணன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த விழாவில் திரைப்பட விநியோகஸ்தர்
அரிமா மணிகண்டன், ராம் சினிமாஸ் ராமசாமி ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, வழக்கறிஞர் பாலமுருகன், ரத்னா திரையரங்க ரவிசங்கர், பி.வி.டி திரையரங்கு ஜெயராஜ், பாம்பே திரையரங்கு முத்துக்குமார், ஆலங்குளம் டி.பி.வி திரையரங்கு கருணாகர ராஜா, புளியங்குடி திரையரங்கு கோமதிநாயகம், சாத்தான்குளம் திரையரங்கு மணிகண்டன் உட்பட தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.