கொரோனா தடுப்பூசி ஒத்திகை
தமிழகத்தில் 17 இடங்களில் இன்று துவங்கியது. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், சமாதானபுரம் மனகாவலம்பிள்ளை மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் தடுப்பு ஊசி ஒத்திகை நடைபெற்றது.;
கொரோனா தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் 17 இடங்களில் இன்று துவங்கியது. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், சமாதானபுரம் மனகாவலம்பிள்ளை மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் தடுப்பு ஊசி ஒத்திகை நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு தடுப்பூசி மையங்களில் தலா 25 பேருக்கான இன்று ஒத்திகை நடைபெறுகிறது. இந்த ஒத்திகை இன்று காலை ஒன்பது 09.30 மணிக்கு துவங்கி, தற்போதுவரை (பிற்பகல் 12.30 ) நடைபெற்று வருகிறது.
இதில் காய்ச்சல் சளி ஏதேனும் இருந்தால் அவர்கள் இந்த ஒத்திகைக்கு பங்கேற்க வேண்டாம் என திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட சுகாதார பயிற்சி குழு மருத்துவர் மருத்துவர் முத்து ராமலிங்கம் கூறும்போது, இந்த ஒத்திகை என்பது நெல்லை மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைபெற்று வருகிறது ஒவ்வொரு மையங்களில் தலா 25 பேர் வீதம் இந்த ஒத்திகையில் பங்கேற்க உள்ளார்கள். இந்த ஒத்திகைக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு காய்ச்சல் சளி இருந்தால் நாங்கள் உள்ளே அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே இந்த ஒத்திகைக்கு பங்கேற்க உள்ளவர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் தகவல்களை தெரிவித்துள்ளோம் அவர்கள் மட்டுமே இந்த ஒத்திகைக்கு பங்கேற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நான்கு படிநிலைகளாக நடைபெறும் இந்த ஒத்திகை முகாம் குறித்த விளக்கம்..
முதல் நாளே செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டவர் மட்டுமே மறுநாள் ஊசி போடுவதற்கு அனுமதிக்கபடுகிறார்கள்.
முதற்கட்டமாக இருமல் சளி இருக்கிறதா என்று சோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னரே அடுத்த கட்டத்திற்கு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
இரண்டாவது கட்டமாக காத்திருப்பு அறையில் பயனாளர்கள் அமர வைக்கப்பட்டு கணினியில் ஏற்கனவே அவர்கள் குறித்த குறிப்புகள் அனைத்தும் கையில் கொண்டு வந்துள்ள அவர்களின் அடையாள அட்டை மூலம் உறுதி செய்யப்படுகிறார்கள்.
மூன்றாவது கட்டமாக ஊசி போடும் அறைக்கு அனுப்பப்படுகிறார்கள் அங்கு அவர்களுக்கு மருந்து செலுத்தப்படுகிறது.
நான்காவது கட்டமாக ஊசி செலுத்தப்பட்ட பயனாளர் மீண்டும் ஓய்வு அறைக்கு செல்கிறார் அங்கு கண்காணிப்பில் இருப்பர் கண்காணிப்பு அரைமணி நேரம் முடித்ததும் வெளியே அனுப்பப் படுவார்கள்.
இந்த ஒத்திகை பணி என்பது இன்று(2-1-2021) மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.