புத்தகங்களுடன் புத்தக கண்காட்சி
பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் 2021 புத்தக கண்காட்சி நெல்லை டவுணில் நடைபெற்றது.;
திருநெல்வேலியில் பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் 2021 புத்தக கண்காட்சி நெல்லை டவுணில் நடைபெற்றது, இப்புத்தக கண்காட்சி மயன் ரமேஷ் ராஜா துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் நாறும்பூநாதன் தலைமை வகித்தார், புகைப்பட கலைஞர் ராஜேஷ் வரவேற்புரையாற்றினார், முதல் விற்பனையை நூலகர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத்துறை தலைவர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கீழடி பாலசுப்பிரமணியம் அதனைப் பெற்றுக் கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷி, மருத்துவர் சுதன், பேராசிரியர்கள் கோமதிநாயகம், இளங்கோமணி, ஓவியர் சுப்பிரமணியன், சபரிநாதன், சக்திவேல் பலர் கலந்து கொண்டு புத்தக கண்காட்சி பற்றி சிறப்புரையாற்றினர்