நெல்லையில் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம்

தியாகி விஸ்வநாததாஸின் 80 வது நினைவு தினத்தை முன்னிட்டு டீம் அசோசியேசன், மற்றும் விஸ்வநாததாஸ் தேசியப் பேரவை சார்பில் பாளை மார்க்கெட் மைதானத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2020-12-31 09:52 GMT

இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு தியாகி விஸ்வநாததாஸ் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தியாகி விஸ்வநாததாஸ் பேரவை ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் செல்லப்பா, பேரவைச் செயலாளர் சிதம்பரம், டீம் அசோசியேஷன் தலைவர் ஜெயமணி, துணைத்தலைவர்கள் மாணிக்கம், ராஜேந்திரன்,மீனாட்சி சுந்தரம், டீம் அகடமி தலைவர் ராமலிங்கம், வழக்கறிஞர் செல்வ சூடாமணி, அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சரவணன், உள்தணிக்கையாளர் சங்கரநாராயணன், செயற்குழு உறுப்பினர்கள் குமரகுருபரன், சுரேஷ் முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News