ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க கோரி ஆர்ப்பாட்டம்

14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்கக்கோரி வண்ணாரப்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது.;

Update: 2020-12-31 09:36 GMT

நெல்லையில் சிதம்பரனார் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் சார்பில், நெல்லை குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர் தேசிய தொழிலாளர் இயக்கம் நிர்வாகிகள் கோரிக்கை விளக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு செயலாளர் நாலாயிரம் முன்னிலை வகித்தார், முத்துக்குமார் வரவேற்றுப் பேச சங்கரநாராயணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

வண்ணாரப்பேட்டை தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடைபெற்ற கோரிக்கை முழக்க போராட்டத்தில் 16 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க வேண்டும், பதிமூன்றாவது ஒப்பந்தப்படி அனைத்து கழகங்களுக்கும் வழங்கிட வேண்டும், நிலுவை தொகை ஓய்வூதிய பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும், விழாக்கால விடுமுறை என்ன கிழமையில் வருகிறதோ, அதே கிழமையில் விடுமுறை வழங்க வேண்டும். மாற்றுப்பணி என்ற திட்டத்தினை ஒழித்திட கோரி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் சிதம்பரனார் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மாரியப்பன் மெக்கானிக் மணி தாமஸ் சீனிவாசன் மாரியப்பன் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News