நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பயிற்சி முகாம்

நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தங்களின் விடுமுறை காலத்தை பயனுள்ள வகையில் கழிப்பதற்கு விடுமுறை கால பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.;

Update: 2020-12-31 09:11 GMT

 விடுமுறை கால  பயிற்சி முகாமில் வண்ணத் தாள்கள் கொண்டு அழகிய சுவர் மாட்டி தயாரிக்கும் பயிற்சி, கண்ணாடி ஓவிய பயிற்சி, பொம்மை அலங்கார பயிற்சி மற்றும் கழிவு பொருட்களிலிருந்து கலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடத்தப்பட்டன. பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று உடைந்த கண்ணாடி வளையல்கள் கொண்டு அழகிய டிரே தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இணையதளத்தில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் இக்காலத்தில் இப்பயிற்சிமுகாம் தங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக மாணவ மாணவிகள் கூறியதாக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.

Similar News