திருச்சி பூம்புகார் கொலுபொம்மை கண்காட்சியை பார்வையிட பெண்கள் ஆர்வம்

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சியை பெண்கள் அதிக அளவில் பார்வையிடுகின்றனர்.;

Update: 2021-10-06 05:30 GMT
திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் பெண் ஒருவர் கொலு  பொம்மையை தேர்வு செய்தார்.

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில்  தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்ேவளர்ச்சிக் கழகத்தின் "பூம்புகார்விற்பனை நிலையம்" உள்ளது. இங்கு முக்கிய பண்டிகை தினங்களில் அதற்கான பொருட்கள் பொது மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க வழி வகை செய்கின்றனர்.

அந்த வகையில் நடைபெற உள்ள நவராத்திரி பண்டிகையையொட்டிகொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும்விற்பனை கடந்த செப்டம்பர் 22-ல் இருந்துதொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் பல விதமான கொலு பொம்மைகள்,கொலு செட்கள் இடம் பெற்று உள்ளன.

கொண்டபள்ளிபொம்மைகள், மரபாச்சி, காகிதக்கூழ், மண், பளிங்குகல், மாக்கல்,நவரத்தின கற்கள் ஆகியவற்றால்செய்யப்பட்ட பொம்மைகள் ரூ.100முதல் ரூ.45 ஆயிரம் ரூபாய் வரைஇடம்பெற்றுள்ளன. ராமாயண செட்டுசிலைகள் ரூ.45 ஆயிரம், கிருஷ்ணலீலை சிலைகள் 13 செட்டுக்கள் ரூ.25ஆயிரம் என விற்பனைக்காகவைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாகமலைக்கோட்டை,தஞ்சாவூர் பெரியகோயில், பழனி மலை, திருத்தணி,தங்கத்தேர், அம்மன் தேர், முருகன்கோயில், மதுரை மீனாட்சி அம்மன்,விநாயகர் திருமணம், பெண்பார்த்தல், பூணூல் செட், காமதேனுலட்சுமி, சிருங்கேரி சாரதாம்பாள்,உடுப்பி கிருஷ்ணர் உள்ளிட்டஆயிரக்கணக்கான செட்பொம்மைகளும் விற்பனைக்குவைக்கப்பட்டுள்ளன.

இந்தகண்காட்சி வரும் 20-ஆம் தேதி வரைநடைபெறவுள்ளது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தள்ளுபடி விலையும் கொடுத்து வருகின்றனர். இந்த கண்காட்சியை பெண்கள் அதிக அளவில் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.


Tags:    

Similar News