அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2021-11-13 03:33 GMT

சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் கொமோரின் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இந்த கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Tags:    

Similar News