தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்
Tutricorin Corporation Announcement தூத்துக்குடி மாநகாரட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாநகாரட்சி மேயர் ஜெகன் பெரியசாமி. (கோப்பு படம்).
Tutricorin Corporation Announcement
அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வரையில் ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதியத் திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புறப் பகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரப் பகுதிகளிலும் 18.12.2023 முதல் 6.01.2024 வரை ‘மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் 70 இடங்களில் வார்டு வாரியாக நடைபெறுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் முகாம் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் 18.12.2023 அன்று 22, 26, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு சத்திரம் தெருவில் உள்ள அறிஞர் அண்ணா திருமணமண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது. 13,14 ஆகிய வார்டுகளுக்கு போல்பேட்டை தங்கம்மாள் உயர்நிலைப் பள்ளியிலும், 20, 21, ஆகிய வார்டுகளுக்கு கந்தசாமிபுரம் ஆர்.சி. பெத்தானி நடுநிலைப் பள்ளியிலும், 19.12.2023 அன்று 29,37 ஆகிய வார்டுகளுக்கு சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், 45 ஆவது வார்டுக்கு லெவிஞ்சிபுரம் மாநகராட்சிப் பள்ளியிலும், 36 ஆவது வார்டுக்கு சுப்பையாபுரம் சார்லஸ் நடுநிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது.
20.12.2023 அன்று 43 ஆவது வார்டுக்கு காமராஜ் கல்லூரியிலும், 48, 50 ஆகிய வார்டுகளுக்கு கால்டுவெல் காலனி சங்கர் சபிதா மஹாலிலும், 49 ஆவது வார்டுக்கு அன்னம்மாள் கல்லூரியிலும், 21.12.2023 அன்று 52, 53, 54 ஆகிய வார்டுகளுக்கு முத்தையாபுரம் மரியமஹாலிலும், 38, 41 ஆகிய வார்டுகளுக்கு ஜார்ஜ் ரோடு அபிநயா மஹாலிலும், வார்டு எண் 39 க்கு சிவன் கோயில் மாநகராட்சி திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.
22.12.2023 அன்று 57, 58 ஆகிய வார்டுகளுக்கு சவேரியார்புரம் ஆர்.சி. துவக்கப் பள்ளியிலும், 46 ஆவது வார்டுக்கு பாத்திமாநகர் சமுதாயநலக் கூடத்திலும், 23.12.2023 அன்று 47 ஆவது வார்டுக்கு தூத்துக்குடி ரோட்டரி கிளப் கட்டிடத்திலும், 26.12.2023 அன்று 56 ஆவது வார்டுக்கு முத்தையாபுரம் கீதா மெட்ரிக் பள்ளியிலும், 5 மற்றும் 6 ஆகிய வார்டுகளுக்கு பூபால்ராயபுரம் மெயின் ரோட்டில் உள்ள சல்ஹா மஹாலிலும், வார்டு 9 மற்றும் 23-க்கு சத்யா திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.
27.12.2023 அன்று 51, 60 (காதர் மீரான் நகர், ஊரணி ஒத்தவீடு, முடுக்குகாடு, வீரநாயக்கன்தட்டு) ஆகிய வார்டுகளுக்கு தெர்மல் நகர் -1இல் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியிலும், வார்டு எண் 1- க்கு மீளவிட்டானில் உள்ள டிடிஏ பள்ளியிலும், 28.12.2023 அன்று வார்டு 10 மற்றும் 11-க்கு செயிண்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளியிலும் ,வார்டு எண் 7 மற்றும் 8-க்கு ஆக்சிலியம் மேல்நிலைப் பள்ளியிலும், வார்டு எண் 12 மற்றும் 4-க்கு ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள செயிண்ட் தாமஸ் சிபிஎஸ் பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது.
29.12.2023 அன்று வார்டு எண் 2 மற்றும் 3-க்கு குறிஞ்சிநகரில் உள்ள லட்சுமி மஹாலிலும், வார்டு எண் 33 மற்றும் 34 ஆகிய வார்டுகளுக்கு மில்லர்புரம் செயிண்ட் மோசஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 30.12.2023 அன்று 35,51 (இந்திராநகர்,திருவிகநகர்) ஆகிய வார்டுகளில் அரசுபாலிடெக்னிக் கல்லூரியிலும், வார்டு எண் 15 மற்றும்16- க்கு தபால் தந்தி காலனியில் உள்ள லியோ மழலையர் பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது.
3.01.2024 அன்று வார்டு எண் 31, 32-க்கு அண்ணாநகர் 10 ஆவது தெருவில் உள்ள தங்கம் நடுநிலைப் பள்ளியிலும், 04.01.2024 அன்று வார்டு எண் 19-க்கு டுவிபுரம் 11 ஆவது தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், வார்டு எண் 15-க்கு மடத்தூர் பத்திரகாளி அம்மன் கோயில் திருமண மண்டபத்திலும், வார்டு எண் 30-க்கு டூவிபுரம் 2 ஆவது தெருவில் உள்ள டி.என்.டி.ஏ நடுநிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது.
வார்டு 55 மற்றும் 59-க்கு மரியா மஹாலிலும், 05.01.2024 அன்று வார்டு 17 மற்றும் 18- க்கு மில்லர்புரம் பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியிலும், வார்டு 44-க்கு பிரையண்ட் நகர் 7 ஆவது தெருவில் உள்ள டி.என்.டி.ஏ. நடுநிலைப் பள்ளியிலும், 06.01.2024 அன்று வார்டு 42-க்கு சிவந்தாகுளம் மாநகராட்சி துவக்கப் பள்ளியிலும் வார்டு 24 மற்றும் 25- க்கு மட்டக்கடையில் உள்ள பாலகிருஷ்ணா திருமண மண்டபத்திலும், வார்டு 40-க்கு எம்பரர் தெருவில் உள்ள ஜே.எம்.ஜே மஹாலிலும் முகாம் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.