தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளியில் சட்ட வகுப்பு தேர்வு: எஸ்.பி. ஆய்வு

காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களுக்கான சட்ட வகுப்பு இறுதி தேர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டார்.;

Update: 2023-12-11 12:13 GMT

தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிலும் பயிற்சி காவலர்களுக்கான சட்ட வகுப்பு இறுதித் தேர்வை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி பேரூரணியில் காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி காவலர்களுக்கான சட்ட வகுப்பிற்கான இறுதித் தேர்வை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

காவலர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பல்வேறுகட்ட பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு பயிற்சி பெறுவோர் முறையாக தேர்வு பெற்ற பிறகே காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை பணிக்கு செல்ல முடியும்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 300-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு காவல் துறை அணிவகுப்பு உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு சட்டவகுப்பிற்கான இறுதி தேர்வு இன்று துவங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சட்டவகுப்பிற்கான முதல் நாள் தேர்வை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின்போது காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வரும், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளருமான சகாய ஜோஸ், திருநெல்வேலி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News