தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-11-02 14:46 GMT

மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட சுடலைமுத்து.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காலனி தெருவை சேர்ந்த திரவியம் மகன் முத்தையா (30) என்பவரிடம் சாத்தான்குளம் ஆர்.சி வடக்கு தெருவை சேர்ந்த வீரமணி மகன் சுடலைமுத்து (48) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் வேலை அல்லது அரசு வேலைகள் ஏதாவது ஒன்று வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து, முத்தையாவிடம் இருந்து 2.50 லட்சம் பணத்தை சுடலமைத்து பெற்று உள்ளார். இதேபோன்று சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர்களான தேவராஜ் என்பவரிடம் ரூபாய் 6 லட்சமும், சுயம்பு என்பவரிடம் ரூபாய் 6 லட்சமும், சுபாஷ் என்பவரிடம் ரூபாய் 1,50,000-மும் என மொத்தம் ரூபாய் 16 லட்சம் பணத்தை வங்கி கணக்கு மூலமாகவும் மற்றும் ரொக்கமாகவும் சுடலமுத்து பெற்றுள்ளார்.

அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி கொடுக்கமாலும், பணத்தை திருப்பி தராமலும் சுடலைமுத்து ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து மேற்படி முத்தையா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அத்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும், மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, சுடலைமுத்துவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News