Tuticorin District 3 Person Goondas தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Tuticorin District 3 Person Goondas தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.;

Update: 2023-12-01 15:14 GMT

Tuticorin District 3 Person Goondas

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரல் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த மாதம் 3 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சேகர் (64) என்பவரை மதுபோதையில் தகராறு செய்து கம்பால் தாக்கி கொலை செய்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி களக்காடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் சிவசூரியன் (26) என்பவரை ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கடந்த 27.09.2023 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மங்கலகுறிச்சி to திருப்பதி ரோடு பகுதியில், கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்த கேபிரியல் மகன் எப்ட்வின் குணா (27) என்பவரை தாக்கி அவரிடமிருந்த வாட்ச்சை பறித்து சென்ற வழக்கில் ஏரல் சிவராமமங்கலம் பகுதியை சேர்ந்த வீரதுரை மகன் தண்டபாணி (21) என்பவரை ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் கைதான சிவசூரியன் மற்றும் தண்டபாணி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 02.11.2023 அன்று தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, மீனவர் காலனியை சேர்ந்த நியூட்டன் மகன் அல்பன் (32) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

கைதான அல்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

இதையெடுத்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின்பேரில், கொலை வழக்கில் கைதான சிவசூரியன், வழிப்பறி வழக்கில் கைதான சிவராமமங்கலம் பகுதியை சேர்ந்த தண்டபாணி மற்றும் போக்சோ வழக்கில் கைதான தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, மீனவர் காலனியை சேர்ந்த அல்பன் ஆகிய மூன்று பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 164 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News